ads
கண் கலங்கி பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண்
ராசு (Author) Published Date : Oct 16, 2025 16:18 ISTபொழுதுபோக்கு
அக்டோபேர் 17 தேதி வெளியாக உள்ள டீசல் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசிய கருத்து, தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தீபாவளிக்கு டீசல் வெளியாவதற்கு என்ன தகுதி இருக்கிறது, பெரிய ஹீரோவோ அல்லது பெரிய ஹீரோயினோ இல்லையே என்று சிலர் தயாரிப்பாளர் தேவா அவர்களிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட ஹரிஷ் கல்யாண், மேடையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
ஒரு படம் வெற்றிபெற பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ தேவையில்லை. நல்ல கதை மட்டுமே போதும். அந்த வகையில் டீசல் ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதில் உள்ள கருத்தும் மக்களுக்குப் பிடிக்கும். நிச்சயம் இப்படம் வெற்றிபெறும், என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே சமயம், தீபாவளிக்கு வெளியாகும் மற்ற படங்களான டியூட் மற்றும் பைசன் ஆகிய படங்களும் வெற்றியடைய வேண்டும் என அவர் வாழ்த்தியதோடு, அனைத்து படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றும் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
