ads

மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்

மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்

மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மொத்தம் மூன்று பாகங்களை கொண்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை அடுத்த ஆண்டில் வெளியிட உள்ளனர்.

இதற்கிடையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இயக்குனர் வெற்றிமாறனின் வழக்கமான லோக்கல் கலாச்சாரத்தை சார்ந்த படமாக இந்த படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த படத்திற்கு 'அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை வி கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வட சென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான 'மாரி 2' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்