ads
தனுஷ் & மிருணாள் தாக்கூர் காதலிக்கிறார்களா ? வெளிப்படையாக விளக்கம் கொடுத்த மிருணாள் தாக்கூர்
ராம் குமார் (Author) Published Date : Aug 13, 2025 10:12 ISTபொழுதுபோக்கு
சினிமா வட்டாரங்களில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் குறித்துப் பரவி வந்த வதந்திகள் குறித்து மிருணாள் தாக்கூர் விளக்கமளித்துள்ளார்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்த பிறகு, தனுஷ் மிருணாள் தாக்கூர் உடன் டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் நிகழ்ச்சியிலும், மிருணாள் தாக்கூர் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் கலந்துகொண்டதே இந்த வதந்திகளுக்குக் காரணம்.
இது குறித்து மிருணாள் தாக்கூர், "நானும் தனுஷும் நல்ல நண்பர்கள் மட்டுமே. இந்த வதந்திகளைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது," என்று கூறி இச்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம், அவர்கள் இருவரும் காதலிப்பதாகப் பரவிய செய்திகள் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.