ads

மிரட்டும் தேவி 2 ட்ரைலர்: இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கிய விஜயின் ஹாரர் தொடர்ச்சி

தேவி 2 ட்ரைலர்

தேவி 2 ட்ரைலர்

ஹாரரும் நகைச்சுவையும் கலந்த  தேவியின் தொடர்ச்சியாக இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா மற்றும் சோனு சூட் ஆகியோர் முன்னணியாக நடித்துள்ள தேவி 2 வெளிவரவிருக்கின்றது.  மேலும் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தொடர்ச்சியாக டீசரும் பாடல்களும் வெளியான நிலையில் ரசிகர்கள் இடையே பலத்த வரவவேற்பையும், எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது. ரசிகர்களின் வேட்கையை சற்று தணிக்கும் விதமாக தயாரிப்பு குழு படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது.

2 நிமிடம் 2 நொடிகள் அளவு கொண்ட ட்ரைலர் பார்ப்பவர்களின் கண்களை இமைக்க விடாமல் செய்கிறது. ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து படைக்கப்பட்டுள்ளதை ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது. பேய்களின் அலப்பறைகளும், நடிகர் குழுமத்தின் நகைச்சுவை விருந்தும், பிரபுதேவா, தமன்னாவின் நடன நலினங்களும், சண்டை கட்சிகளும் படத்தை காண இன்னும் ஆவலை ஏற்படுத்துகின்றது. கடந்த பகுதி மிகவும் மகிழ்ச்சியை வழங்கியிருந்தாலும், அதை விட வேடிக்கையான இரட்டை அம்சம் இருப்பதைக் ட்ரைலர் மூலம் காணலாம்.

பகுதி 2 என்பதாலோ இரட்டிப்பு நகைச்சுவை, இரண்டு பேய்கள், இரட்டிப்பு ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது தேவியின் தொடர்ச்சி. அனான்கா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அந்தோணி தொகுத்தும், இயக்குனர் விஜய் கதைக்களத்தை அமைத்தும், கிரேசி மோகன் வசனங்கள் இயற்றியுள்ளார். கணேஷ் மற்றும் ரவிந்தரன் ஜிவி பிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கீழ் தயாரித்துள்ளார். வெள்ளி திரைகளில் தேவி 2இன் தரிசனம் மே 31 அன்று கிடைக்கும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

தேவியின் தொடர்ச்சியாக தேவி 2 எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனை பிடித்து பேய்கள் செய்யும் சேட்டைகளை காட்டியுள்ளார் இயக்குனர். தேவி 2 இரட்டிப்பு அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிரட்டும் தேவி 2 ட்ரைலர்: இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கிய விஜயின் ஹாரர் தொடர்ச்சி