ads

இந்த வார சினிமா: ஹாரர் தொடர்ச்சியான பிரபு தேவா - தமன்னாவின் தேவி 2 ஸ்பெஷல்

தேவி 2 ஸ்பெஷல்

தேவி 2 ஸ்பெஷல்

இயக்குனர் விஜய் தனது அடுத்த படமான தேவி 2வை இந்த வாரம் வெளியிடவுள்ளார். பிரபு தேவா, தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் 2013இல் வெளிவந்த ஹாரர் படமான தேவியின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகம் ஒரு ரசிகர்களை கவர்ந்து பெரும் வெற்றியை பெற்றது. படம் மற்ற ஹாரர் படங்களை போல வழக்கமான கதைக்களத்தையே கொண்டிருந்தாலும், சற்று வித்யாசமான திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகளை கொண்டிருந்ததால் விறுவிறுப்பு குறையாமல் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

மேலும் முதல் பாகத்தில் ஆர்.ஜெ.பாலாஜி, சோனு சூத் போன்ற நடிகர்கள் நடித்தனர், ஆனால் இரண்டாம் பாகத்தில், பிரபு தேவா, தமன்னாவை தவிர்த்து அனைவரும் வேறு நடிகர்களாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையாக வருமா அல்லது அதே போல் கதை கலம் கொண்ட வேறு படமாக வருமா என்பதாய் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

நந்திதா ஸ்வீதா, டிம்பிள் ஹயாதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சாம் சி.எஸ் இசையமைத்து, ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் விநியோகம் செய்கிறது. படம் முதல் பாகத்தை போல தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. தமிழ் பாடல் வரிகள் நா. முத்துகுமார், மதன் கார்கி, அருண்ராஜா காமராஜ், தெலுங்கு பாடல் வரிகள் ராமஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார். முதல் பாகத்தில் வைறல் ஹிட்டான சல் மார் பாடலானது முதல் பகுதியிலிருந்து மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் அதே தினத்தில் வெளியாவதால் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு சற்றும் குறைந்த அளவே காணப்படுகிறது. முதல் பாகம் ரெமோ, ரெக்க போன்ற பெரிய படங்களும் மோதியும் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு மூன்று படங்களை அடுத்தடுத்து தியா, லக்ஷ்மி, வாட்ச்மன் ஆகிய படங்களை இயக்கி வெளியிட்ட விஜய், கடைசியாக வெற்றி கண்டது தேவி முதல் பாகம் என்பதனால் வெற்றி பாதைக்கு திரும்ப தற்போது தேவி 2வை கையில் எடுத்துள்ளார். இந்த யுக்தி மக்களை கவர்ந்து பாக்ஸ்ஆபிஸில் வெற்றி காணுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் மே 31 வரை.

இந்த வார சினிமா: ஹாரர் தொடர்ச்சியான பிரபு தேவா - தமன்னாவின் தேவி 2 ஸ்பெஷல்