ads
தேஜாவு (2022) முழு தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக்
புருசோத்தமன் (Author) Published Date : Jul 22, 2022 14:48 ISTபொழுதுபோக்கு
க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு தான் சிறந்தவர் என்பதை நடிகர் அருள்நிதி மீண்டும் நிரூபித்தார். அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் தனது க்ரைம் த்ரில்லர் படமான தேஜாவு இன்று திரையரங்குகளில் வெளியானது.
எந்த படம் வெளியானாலும், கத நாயகனின் ரசிகர்கள் பெறுகிறார்களோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸ் இனத்தளம் சார்ந்தவர்கள், முதலில் படத்தை பார்ப்பதும் மட்டுமில்லாமல், தங்களது இனைய வாசிகளை மகிழ்விக்க முழு படத்தையும் பதிவு செய்து, இணையத்தில் கசிய விடுவது வழக்கம்.
இதில் அருள்நிதி நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் தேஜாவு படமும் சேர்ந்துவிட்டது. ஆம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் மற்றும் இவர்களை போல் இருக்கும் 1தமிழ்மவீ, மூவீ ரூல்ஸ் போன்ற இணைய தளங்கள், தங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தேஜாவு முழு தமிழ் படத்தையும் கசிய விட்டுள்ளனர்.
படத்தை பற்றி சில செய்திகள். இப்படம் சுமாரான சராசரியான வரவேற்பை பெற்றாலும், தேஜாவு படத்திற்கு த்ரில்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.
தேஜாவு திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் இருக்கிறது. அதில் ஒரு எழுத்தாளர் (அச்யுத் குமார்) அவரது அனைத்து கற்பனை கதாபாத்திரங்களும் அவரது நிஜ வாழ்க்கையில் வருவதைக் காண்கிறார்.
அவர் தனது நாவலில் எதை எழுதுகிறாரோ அது அவருடைய நிஜ வாழ்க்கையில் நடக்கும். இவை பயங்கரமான சம்பவங்களாக மாறிவிடும். அவர் எழுதியதில், ஒரு இளம் பெண் மூன்று ஆண்களால் கடத்தப்படுவார், அங்குதான் கதை தொடங்குகிறது.
எழுத்தாளர் தனது கற்பனைக் கதாபாத்திரங்களால் அச்சுறுத்தப்படுகிறார். போலீசில் புகார் கொடுத்தால் யாரும் நம்ப மாட்டார்கள். இடையில் பயந்து கதை எழுதுவதை நிறுத்திவிடுவார்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், காவல்துறையும் மற்றவர்களும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயலில் இறங்குவார்கள். போலீஸ் அதிகாரியாக அருள்நிதி, எழுத்தாளரிடம் பயப்படாமல் தனது கதையைத் தொடரச் சொல்கிறார், பின்னர் என்ன நடக்கிறது என்பது தேஜாவு படத்தின் கதை.
பார்வையாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வித்தியாசமான கருத்துடன் அற்புதமான கதைக்களத்தை கொண்டது தேஜாவு தமிழ் படம். அரவிந்த் சீனிவாசன் கதையை நன்றாக எழுதியுள்ளார், ஆனால் அவர் தனது எழுத்தின் துல்லியத்தை திரையில் கொண்டு வரவில்லை என்று கூறலாம்.
இருப்பினும், அவர் ஒரு அறிமுக இயக்குனர் என்பதை நம்புவது கடினம். காட்சிகள் அமைத்த விதம், நடிகர்கள் தேர்வு மற்றும் கதைக்களத்துடன் முழுமையாக நம்மை இழுக்கு படுகிறது.
ஜிப்ரானின் இசை தேஜாவு படத்தின் முக்கிய பாசிட்டிவ். இவரின் இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவரது த்ரில்லர் இசையால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. நடிப்பு என்று வரும்போது, எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பாத்திரத்திற்கு முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
தேஜாவு ஒரு அறிமுகப் படம் என்பதால், படத்தில் சில லாஜிக்கல் ஓட்டைகள் உள்ளன. தேஜாவு தமிழ் படம் கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் படத்தில் அடல்ட் கன்டென்ட் எதுவும் இல்லாததால் குடும்பத்துடன் ரசிக்க முடியும்.
தேஜாவு படத்தை விஜய் பாண்டி கே தயாரித்துள்ளார் மற்றும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் பேனர்களின் கீழ் பிஜி முத்தையா இணைந்து தயாரித்துள்ளார்.
தேஜாவு தமிழ் திரைப்பட நடிகர்கள் அருள்நிதி, மது, அச்யுத் குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், சேத்தன், காளி வெங்கட், மைம் கோபி, சூப்பர்குட் சுப்ரமணி, ஹார்வின் ராம், மரியா வின்சென்ட் மற்றும் செந்து மோகன்.
படத்தின் வரவேற்பு எந்த நிலையில் இருந்தாலும், நாம் பெரிய திரையில் காண்பதினால், படம் பெருமளவு நஷ்டத்தை தவிர்க்கலாம். மாறாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்துள்ள பதிப்புகளினால் பார்ப்பது, நல்ல கதையின் உருவாக்கத்தை உணருவது கடினம்.