தர்பார் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது: நேற்று வெளியான தர்பார் திரைப்படம், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது, படக்குழுவிற்கு மிகுந்த அதிர்ச்சி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படம் இணையத்தில் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சி.
போலீஸ் அதிகாரியாக நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினி நடித்திருக்கும் படம் தர்பார், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவிற்கு சொல்லிக்கொள்ளும் படி அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.
படத்தின் முதல் பகுதி விறுவிறுப்பாக இருந்தது ஆனால் இரண்டாம் பகுதி எதிர்பார்பை பூர்த்திசெய்யவில்லை என்று கூறலாம். இரண்டாம் பகுதி, சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால் , படம் சீக்கிரமாக முடிந்துவிட்டது.
பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் ரிலீஸ் ஆகியுள்ளதால் இரண்டாம் நாளில் வசூல் குறைவாக உள்ளது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால், வசூல் குறையும் என எதிர்பார்க்க படுகிறது.

