ads

கரூர் திரையரங்கில் ஒருவாரமாக தொடரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கரூர் திரையரங்கில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கரூர் திரையரங்கில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடந்த ஒருவார காலமாக அனைத்து கரூர் திரையரங்குகளிலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கரூரில் உள்ள திரையரங்குகள் விவரம், அஜந்தா டாக்கீஸ்,  எல்லோரா டாக்கீஸ், திண்ணப்பா தியேட்டர், அமுதா தியேட்டர்ஸ் (அமுதா - பொன் அமுதா), கலையரங்கம் தியேட்டர்ஸ் (கலையரங்கம் - கவிதாலயா). குறிப்பிட்டுள்ள அனைத்து திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிகள் தொடங்கும் முன்னே, அதிநவீன ஸ்பிரே இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறார்கள்.

கிருமி நாசினி தெளிக்கும் இடங்கள், தியேட்டர் நுழைவாயிலில் இருந்து பின் புறம் இருக்கும் கழிப்பறை வரை தெளிக்கப்படுகிறது. கார் மற்றும் பைக் பார்க்கிங், கழிவறை மற்றும் அதன் சுற்றி இருக்கும் சுவர்கள், மக்கள் அமரும் இருக்கைகள் சுற்றி மற்றும் தியேட்டர் காம்பவுண்ட் சுவர் வரைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் வராமல் இருக்க திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இதை பற்றி திரையரங்கு உரிமையாளரிடம் விசாரித்த போது, நாங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக கிருமி நாசினி தெளிப்பது வழக்கம். குறிப்பாக மழைக் காலங்களில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகாமல் இருப்பதற்கும், மற்ற காலங்களில் மக்களுக்கு எந்தவித தொற்று நோய்கள் வராமல் இருப்பதற்கும் ஸ்பிரே மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இப்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களில் இருப்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்க்க வந்த வாடிக்கையாளரிடம் விசாரிக்கையில், கரூர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, இது போன்ற ஏற்பாடுகள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளில் மேற்கொண்டால், கிருமிகள் பரவுவதை தடுக்கலாம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லையென்றாலும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் அவசியம்.

கரூர் திரையரங்கில் ஒருவாரமாக தொடரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை