ads

சூடுபிடித்தது தளபதி விஜயின் பிகில் பட வியாபாரம்: தமிழக மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமம்

தளபதி விஜயின் பிகில்

தளபதி விஜயின் பிகில்

நடிகர் விஜயின் அடுத்த படமான பிகில் பார்வை போஸ்டரையும் தலைப்பையும் சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு முன்பு வெளியிட்டது, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மண்ட். மேலும் அட்லீ இயக்கிய படம், தெறி மற்றும் மெர்சலை அடுத்து விஜயுடன் இணையும் மூன்றாவது படமாகும். ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பிகில், 2019 தீபாவளி பண்டிகை அன்று வெளியாக தயாராகி வருகிறது.

தளபதி விஜயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஆர்வத்தை உருவாக்கி, எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கும் நிலையில், பிகிலின் தமிழக திரையரங்க உரிமைகள் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டயின்மன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. தயாரியுப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மன்ட் இந்த செய்தியை வெளியட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் தடம் போன்ற திரைப்படங்களை வெளியிட்ட இந்நிறுவனம் பிகில் படத்தை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

பிகில் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டு உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் மற்றும் எக்ஸ் ஜென் ஸ்டுடியோவுக்கு விற்று முடித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆடியோ உரிமைகளை சோனி மியூசிக் வாங்கியுள்ளது, அதே நேரத்தில் சன் டிவி அனைத்து மொழிகளின் (இந்தி தவிர) செயற்கைக்கோள் உரிமையை பெற்றுள்ளது.

பாலிவுட் ஹங்காமா நாளிதழில் வெளியான செய்தியின்படி, விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வரவிருக்கும் தமிழ் படமான பிகில் படத்தில் சிறப்பு தோற்றமளிக்க ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், படக்குழு இந்த கோரிக்கையுடன் ஷாருக்கானை அணுகியவுடன், ஷாருக் இதற்கு ஒப்புக்கொண்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு கமலஹாசனின் ஹேராம் படத்தில் தோண்றிய பாலிவுட் பாட்ஷா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் தடம் பாதிக்க உள்ளார்.

சூடுபிடித்தது தளபதி விஜயின் பிகில் பட வியாபாரம்: தமிழக மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமம்