தளபதி ரசிகர்கள் பெரும் உற்சாக வெள்ளத்தில் திளைத்துள்ளனர். தளபதியின் பிறந்தநாள் அன்று அவரது வெளியாக போகும் பிகில் திரைப்படத்தின் முதல் பார்வை அடுத்தடுத்து வெளியானது. மூன்று போஸ்டர்கள் வெளியாகிய நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இன்னும் வேகம் கூட்டும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் அர்ச்சனா கல்பாத்தி "தளபதி ரசிகர்களின் பிரத்யேக தகவல் இன்று மாலை 6:00 மணிக்கு வரவுள்ளது (இது ஒற்றை / டீஸர் / டிரெய்லர் / ஆடியோ வெளியீட்டு தேதி / வெளியீட்டு தேதி பற்றி அல்ல) உற்சாகம் அளிக்கும் ஏதோவொன்றுக்காகத்தான் நாம் அனைவரும் காத்திருக்கிறோம். யூகிக்கத் தொடங்குங்கள், காத்திருக்கத் தொடங்குங்கள்" என தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றி இருந்தார்.
அட்லீ இயக்கிய பிகில் தளபதி விஜய் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஜி.கே. விஷ்ணு கேமரா மேனாகவும், டி.முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ரூபன் எடிட்டராகவும் இப்படத்த்தில் பணியாற்றி உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி நாள் அன்று படம் வெளியீடப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

