ads

வெளியாவதற்கு முன்பே 200 கோடி வியாபாரத்தை தொட்ட பிகில், தளபதி விஜய் சாதனை

பிகில் தளபதி விஜய்

பிகில் தளபதி விஜய்

விஜய் தனது ஒவ்வொரு படங்களுடனும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு படி மேல் உயர்வது ஒரு பழக்கமாகிவிட்டது. கோலிவுட்டில் தற்போது மிகப்பெரிய ஓப்பனிங் மற்றும் தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் பட்டியலில் முதல் விதத்தில் உள்ளார் தளபதி விஜய். படத்தின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அவரது முந்தைய படமான சர்க்கார், பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டியது.

முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மீட்டெடுக்க அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. தளபதியின் வரவிருக்கும் படமான பிகிலின் அனலை பறக்கும் வியாபாரம் துவங்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பிகில், ரசிகர்களை பூரிப்படைய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியீட்டுக்கு முன்னரே வணிகம் 220 கோடி ரூபாயைத் தாண்டும் அறிகுறி தெரிகிறது, இது கோலிவுட்டில் ரஜினிகாந்தின் படங்கள் மட்டுமே சாதித்துள்ளது.

பிகில் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டு உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை யுனைடெட் இந்தியா எஸ்ப்போர்ட்டர்ஸ் மற்றும் எக்ஸ் ஜென் ஸ்டுடியோவுக்கு 30 கோடி ரூபாய்க்கு விற்று முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆடியோ உரிமைகளை சோனி மியூசிக் ரூ .3.5 கோடிக்கு வாங்கியுள்ளது, அதே நேரத்தில் சன் டிவி சாட்டிலைட் உரிமையை ரூ .30 கோடிக்கு பெற்றுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டயின்மென்ட் தயாரிக்கும் அளிக்கும் இப்படத்தின் தமிழக உரிமையைப் பெறுவதற்காக பல  விநியோகஸ்தர்கள் முயன்றுவந்தார்கள். வதந்திகளை காணும்போது உரிமைக்காக விநியோகஸ்தர்கள் 70 கோடி ரூபாய் வரை கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்க்ரீன் சீன் எனும் நிறுவனம் படத்தை 80 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக நிறுவனம் சார்ந்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஜய்க்கு நல்ல ரசிகர்கள் உள்ளனர். இந்த மாநிலங்களிலும் பிகில் வியாபாரம் சிறப்பாக செயல்படுவதை இது உறுதி செய்கிறது. திரையரங்க உரிமைகள் விற்பனையிலிருந்து, தயாரிப்பாளருக்கு தென்னிந்தியாவிலிருந்து ரூ 25 கோடிக்கு மேல் எளிதில் கிடைக்கும் என்று கோலிவுட் கண்காணிப்பாளர்கள் கணித்துள்ளனர். இந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்பனையிலிருந்து சுமார் 25-28 கோடி ரூபாய் சம்பாதிக்க தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும்  டிஜிட்டல் உரிமைகள் ரூ 25 கோடிக்கு கோட் செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

வெளியாவதற்கு முன்பே 200 கோடி வியாபாரத்தை தொட்ட பிகில், தளபதி விஜய் சாதனை