ads

பிக்பாஸ் 3 ஒளிபரப்பாகும் தேதி மற்றும் போட்டியாளர் விவரம்

பிக்பாஸ் 3

பிக்பாஸ் 3

பிக்பாஸ் 3: தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி என்னெவென்றால் அது ஸ்டார் விஜய் தான். இந்த விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 2 மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு டி.ஆர்.பியிலும் முதல் இடம் வகித்து வந்தது. என்ன தான் சமூக ஆர்வலர்களும், பலதரப்பட்ட தரப்பினர்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி குறை கூறி வந்தாலும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுவிட்டது இந்த நிகழ்ச்சி.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் இளம் நடிகர் ஆரவ் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். பிக்பாஸ் சீசன் இரண்டில் நடிகை ரித்விகா வெற்றி பெற்றார். தற்பொழுது பிக்பாஸ் சீசன் மூன்றிற்கான முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. அதோடு பிக்பாஸ் சீசன் மூன்றில் தொகுப்பாளர் யார் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில். பிக்பாஸ் சீசன் மூன்றின் டீசர் வெளியாகி அனைவரது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த முறையும் நமது உலகநாயகன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தியே இந்த மூன்றாவது சீசனின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் இந்த நிகழ்ச்சியை கொண்டுசெல்லும் விதத்திற்கே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக இருக்கின்றனர். மற்ற மொழிகளை விட தமிழ் மொழியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபறக்க இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதற்கு காரணம் நமது உலக நாயகன் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போன சீசனை போன்றே இந்த பிக்பாஸ் சீசன் மூன்றிலும் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் தொகுப்பில் அரசியல் ரீதியான பேச்சுகளும், கிண்டல்களும் இருக்கும் என அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடைபெற்ற தேர்தலின் காரணமாக ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் அவர்களின் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றாவது சீசன் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக தற்பொழுது புதிய தகவல்கள் வந்துள்ளன. இந்த பிக்பாஸ் சீசனில் எந்தெந்த நடிகர் நடிகைகள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற வதந்திகள் பரவலாக பரவ தொடங்கி உள்ளன. அதில் நடிகை லைலா, கஸ்தூரி, சின்மயி, ராதா ரவி போன்றோர் பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்க உள்ளார்கள் என்ற வதந்தியும் வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த பிக்பாஸ் சீசன் 3 கொண்டு வரப்போகும் கலவரங்களை.

பிக்பாஸ் 3 ஒளிபரப்பாகும் தேதி மற்றும் போட்டியாளர் விவரம்