ads

பிக்பாஸ் மூன்றாவது சீசன் பற்றிய ருசீகர தகவல்கள் வெளியானது, விவரம் உள்ளே

பிக்பாஸ் மூன்றாவது சீசன்

பிக்பாஸ் மூன்றாவது சீசன்

தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி என்னெவென்றால் அது ஸ்டார் விஜய் டிவி தான். இந்த விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 2 மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு டிஆர்பியிலும் முதல் இடம் வகித்தது. என்ன தான் சமூக ஆர்வலர்களும், பலதரப்பட்ட தரப்பினர்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி குறை கூறி வந்தாலும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் சீசன் ஒன்றில் இளம் நடிகர் ஆரவ் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.

பிக்பாஸ் சீசன் இரண்டில் “தமிழச்சி” நடிகை ரித்விகா வெற்றி பெற்றார். தற்பொழுது பிக்பாஸ் சீசன் மூன்றிற்கான முதல் கட்ட வேலைகள் ஆரபமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு பிக்பாஸ் சீசன் மூன்றில் தொகுப்பாளர் யார் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில். பிக்பாஸ் சீசன் மூன்றின் தொகுப்பாளர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தான் என்ற ருசீகர தகவலும் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் மூன்றிற்கான முதல் ப்ரோமோ வீடியோ நேற்று காலை EVP ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் பிக்பாஸ் சீசன் மூன்றிற்கான ப்ரோமோ வீடியோ விஜய் டிவில் ஒளிப்பரப்பாகும் என்றும், போன வருடம் போல் ஜூன் 2வது வாரத்தில் பிக்பாஸ் சீசன் 3 தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.போன சீசனை போன்றே இந்த பிக்பாஸ் சீசன் மூன்றிலும் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் தொகுப்பில் அரசியல் ரீதியான பேச்சுகளும், கிண்டல்களும் இருக்கும் என அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடைபெற்ற தேர்தலின் காரணமாக ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் அவர்களின் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிக்பாஸ் சீசனில் எந்தெந்த நடிகர் நடிகைகள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற வதந்திகள் பரவலாக பரவ தொடங்கி உள்ளன. அதில் நடிகை லைலா பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்க உள்ளார் என்ற வதந்தியும் வந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த பிக்பாஸ் சீசன் 3 கொண்டு வரபோகும் கலவரங்களை.

பிக்பாஸ் மூன்றாவது சீசன் பற்றிய ருசீகர தகவல்கள் வெளியானது, விவரம் உள்ளே