பாகுபலி பிரபாஸுக்கு வந்த சோதனை

பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக 'சாஹு' படம் அடுத்த ஆண்டில் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் இவருடைய வீட்டை சீல்வைத்துள்ளனர். விரைவில் இடிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். நடிகர் பிரபாஸுக்கு தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராயதுர்கா நகரில் சொந்தமாக விருந்தினர் வீடு ஒன்று உள்ளது.

இது மொத்தமாக 85 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது அரசுக்கு சொந்தமான இடம், இந்த வீட்டை அரசு அனுமதி இல்லாமல் முறையின்றி கட்டியிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை நடிகர் பிரபாஸுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் முறையின்றி கட்டப்பட்ட இந்த வீட்டை சீல் வைத்து இடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவருடைய  வீட்டிற்கு தற்போது சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவை பரபரப்பாகியுள்ளது. 

Latest Post