ads
அட்டகாசம் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகவுள்ளது
ராம் குமார் (Author) Published Date : Sep 19, 2025 18:47 ISTபொழுதுபோக்கு
அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி 2004 ல் இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அட்டகாசம். இந்தப் படம் அடுத்த மாதம், அதாவது அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, அஜித்தின் 64 வது படமான AK64 குறித்த பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி, இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் அல்லது ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜித்தின் கார் ரேசிங் முடிந்த பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AK64 படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் எது என்பது இதுவரை தெரியவில்லை, விரைவில் அது குறித்த அறிவிப்பு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், AK64 திரைப்படம் துறைமுகம் சார்ந்த கதையாக இருக்கும் என ஒரு வதந்தி பரவி வருகிறது. ஒருவேளை, இதனால்தான் அட்டகாசம் திரைப்படம் மீண்டும் வெளியாகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், அட்டகாசம் படத்திலும் துறைமுகம் தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். அட்டகாசம் படத்திற்கும் AK64 படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.