ads

ஆசியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான என்ஜிகே கட்டவுட்: சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

சூர்யா என்ஜிகே கட்டவுட்

சூர்யா என்ஜிகே கட்டவுட்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா அவர்கள். தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனது ரசிகர்களை கொண்டாட்ட வைத்து வருகிறார் நடிகர் சூர்யா. அவரது அடுத்த சூப்பர்-ஹிட் படமாக உருவெடுக்க தயார் நிலையில் இருக்கிறது என்ஜிகே திரைப்படம். வரும் 31 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் இடத்திலும் அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. காரணம் படத்தை இயக்கி இருப்பது பிரபல இயக்குனர் செல்வராகவன் இசையமைத்து இருப்பது யுவன் ஷங்கர் ராஜா அவர்கள். நடிகர் சூர்யாவுடன் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் என்பதனாலேயே இந்த படத்திற்கு தனி இடத்தை ஒதுக்கி உள்ளனர் ரசிகர்கள்.

போதாத குறைக்கு படம் கடுமையான அரசியல் பேசும் படமாக இருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமொஷனுகாக படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். படத்தை ப்ரொமோட் செய்ய முதல் முறை நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸில் கேட்கும் கேள்விகளுக்கு லைவ் வீடியோ மூலமாக நேரடியாக பதில் சொன்னார். மேலும் படத்தை டுவிட்டரில் டாக் செய்வதற்காகவே ஒரு பிரத்தியேக ஈமொஜி, ஹாஷ்டாகை அறிமுகம் செய்துவைத்தனர் தயாரிப்பாளர்கள். இந்த ஈமொஜி தற்பொழுது டுவிட்டர் வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு முன்பாக மெர்சல் படத்திற்காகவும், காலா படத்திற்காகவும் தான் இளைய தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புகைப்படங்கள் கொண்ட ஈமொஜி  வெளியிடப்பட்டது.

தற்பொழுது என்ஜிகே சூர்யா புகைப்படம் கொண்ட ஈமொஜி வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தை இப்படி ப்ரொமோட் செய்யும் பொழுது நடிகர் சூர்யாவின் கோடானு கோடி ரசிகர்கள் சும்மாக இருப்பார்களா? என்ஜிகே படத்தையும், நடிகர் சூர்யாவையும் இந்தியா முழவதும் பிரபலப்படுத்தும் விதமாக ஆசியாவிலேயே இதுவரை எந்த நடிகருக்கும் வைக்கப்படாத உயரத்தில் சூர்யா கட்டவுட் ஒன்றை தயாரித்து வருகின்றனர். திருவள்ளூர் திருத்தணி மாவட்டத்தில் ஆசிய வரலாற்றில் முதன் முறையாக சூர்யாவுக்கு 215 அடியில் கட்டவுட் வைப்பதற்கான பணியை சூர்யா ரசிகர்கள்  தொடங்கியுள்ளனர்.  இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக தல அஜித்திற்கு இந்தியாவில் 190 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், சூர்யா ரசிகர்கள் தீவிர வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான என்ஜிகே கட்டவுட்: சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்