ads

first look leaks: அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் கசிந்தது

அருண் விஜயின் பாக்ஸர்

அருண் விஜயின் பாக்ஸர்

நடிகர் அருண் விஜய் சமீபத்தில் இரு வேடங்களில் மகிழ்திருமேணி இயக்கத்தில் நடித்த படம் தடம். இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் அருண் விஜய் தற்போது மாஃபியா, அக்னி சிறகுகள் மற்றும் பாக்ஸர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவை அனைத்தும் படமாக்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் உள்ளது. 

கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியாவின் முதல் பார்வை போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. போஸ்டருக்கு பெரும் வரவேற்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. எதிர்பாராத விதமாக, எந்த முன் அறிவிப்பும் இன்றி, பாக்ஸர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகின. 

first look leaks: அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் கசிந்தது

அப்போஸ்டரில் நடிகர் அருண் விஜய் திகில் தரும் தோற்றத்தில் பின்னிய சடைகளுடன் தோற்றம் அளிக்கின்றார். மற்றோரு போஸ்டரில் அடிப்பட்ட கண்களுடன் ரித்திகா சிங் அருகில் நிக்கிறார். இவ்வாறான இரண்டு போஸ்டர் வெளியாக்கி உள்ளது.

first look leaks: அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் கசிந்தது

இப்போஸ்டர் வெளியான பிறகு அருண் விஜய் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். முதல் பார்வை போஸ்டரை வெளியிடுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அது எதிர்பாராத விதமாக கசிந்தது என்றும் கூறியுள்ளார். இதனால் இசையமைப்பாளர் டி.இமான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் என அறிவித்தார். 

போஸ்டர்களில் ரசிகர்கள் காணும் அனைத்தும் அவரது 9 மாத கடின உழைப்பு என்றும் இப்படத்திற்கு உடல் மாற்றங்கள் தேவையாக இருத்தது  என அருண் விஜய் கூறியுள்ளார். சஞ்சனா கல்ரானியும் இப்படத்தில் நடித்துள்ளர். விவேக் இப்படத்தை இயக்கியுள்ளார் எனவும் தெரிவித்தார். 

first look leaks: அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் கசிந்தது