ads

பாலிவுட்டை அசத்தும் அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங்க் ட்ரைலர்

கபீர் சிங்க் ட்ரைலர்

கபீர் சிங்க் ட்ரைலர்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு ப்ளாக்பஸ்ட்டர் திரைப்படமான அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் கபீர் சிங்காக ரீமேக் ஆவது அனைவரும் அறிந்தது. தற்போது அப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஹித் கப்பூர் கியாரா அத்வானி நடிக்கும் இத்திரைப்படம் பாலிவுட் வட்டாரத்தில் உச்ச எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி போன்ற படம் ரீமேக் ஆகி ரசிகர்களை பூர்த்தி செய்வது கடினமான காரியம் என்று கூறப்பட்ட நிலையில் கபீர் சிங்க் படத்தின் முன்னோட்டங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் தற்போது ட்ரைலரை வைத்து மேலும் உட்சாகத்தை கூட்டடியுள்ளது.

தென்னிந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி மூலமே நட்சத்திர பட்டத்தை பெற்றார். படத்தில் அவர் கதாபாத்திரம் பார்வையாளர்களை பூரிப்படைய செய்தது. அத்தகைய கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் ஷாஹித் கப்பூர் அழகாக மறுஉருவாக்கம் செய்திடுப்பார் என்ற நம்பிக்கை முன்னடோன்களை பார்க்கும்பொழுது தெரிகிறது.

மேலும் கியரை அத்வானி ஷாலினி பாண்டேயின் பாத்திரத்தை அழகாக நடித்திருக்கிறார் என்பதிலும் சந்தேகம் இல்லை. தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்கா ஹிந்தியிலும் இயக்குகிறார் என்பதால் படத்தின் தரம் துளியும் குறையாது என்பது உறுதி. படம் உலகம் முழுவதும் ஜூன் அன்று வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் கபீர் சிங்க் எத்தகைய வரவேற்பை பெரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

பாலிவுட்டை அசத்தும் அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங்க் ட்ரைலர்