ads

தல அஜித்திற்கு அடுத்த ஜோடி நிக்கி கல்ராணியா ? சமந்தாவா ?

தல அஜித்திற்கு அடுத்த  ஜோடி நிக்கி கல்ராணியா ? சமந்தாவா ?

தல அஜித்திற்கு அடுத்த ஜோடி நிக்கி கல்ராணியா ? சமந்தாவா ?

விசுவாசம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "நேர்கொண்ட பார்வை". ஹிந்தியில் சீனியர் நடிகையான  வித்யா பாலன், இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். அப்படத்தில் டாப்ஸி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு விக்ரம் வேதா பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட படம் தான், "பிங்க்".  இதன் தமிழ் ரீமேக்காகவே இந்த படம் உருவாகி வருகிறது. எனினும் தமிழில் வெளிவரும் போது அஜித் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்குனர் சில மாற்றங்களை செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகின்றன. 

இந்தப் படத்திற்கான போஸ்டரில் தல அஜித், வயதான வக்கீல் கெட்டப்பில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நேர்கொண்ட பார்வையாக பார்க்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சனிக்கிழமை, இப்படம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைப் பற்றிய அடுத்த விவரங்கள் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கும்  நிலையில், படத்தின் இயக்குனர் வினோத் தல அஜித்தை வைத்தே மற்றொரு படத்தையும்  தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் கதாநாயகிக்கான தேடல் நடந்து வருகிறது.

இது ஒரு ஆக்ஷன் படம் என்பதால், நாயகிக்கான கதாபாத்திரம் வலுக்குறைந்ததாகவே இருக்கும். அதனால், பெரிய நடிகைகளை விட பட்ஜெட் பட நடிகைகளே போதும் என்ற முடிவிற்கு படக்குழு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, நிக்கி கல்ராணி மற்றும் சமந்தாவின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதில், நிக்கி கல்ராணி தேர்வாவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின்  முக்கியக் கதாபாத்திரத்தில், ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்பது மற்றொரு சிறப்பம்சம். 2000ல் வெளியான "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்திற்கு பிறகு, அஜித்துடன் ஐஸ்வர்யா ராய்  சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ல் வெளியான டார்லிங் படத்தின் மூலம் பிரபலமான நிக்கி கல்ராணிக்கு, தற்போது வரை பட வாய்ப்புகள் குறையாத வண்ணம் இருந்து வருகிறது. இவர் நடிப்பில் வெளியான, மரகத நாணயம், ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்றிருக்கின்றன.

சமீபத்தில் ஜீவாவுடன் வெளிவந்த கீ படத்தில், சுட்டிப் பெண்ணாக நடிப்பில் கலக்கி இருக்கும் நிக்கி கல்ராணிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. இளவட்ட ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்த நிக்கி கல்ராணிக்குப் போட்டியாக பல முன்னணி நடிகைகள் இருக்கும்பட்சத்தில், தல அஜித்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைப்பது அதிர்ஷ்டம் தான். எனினும், 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வெளியான பிறகு தான்,  இந்தப்  புதிய  படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். அப்பொழுது தான், படத்தில் தல அஜித்துடன் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் யார்  என்ற விவரம் தெரிய வரும் என்று சினிமா வட்டாரங்களில் வரும் செய்திகள் சொல்கின்றன.

தல அஜித்திற்கு அடுத்த ஜோடி நிக்கி கல்ராணியா ? சமந்தாவா ?