வெளியானது விசுவாசம் படத்தின் கிராமத்து தல்லே தில்லாலே பாடல்


நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ள படம் 'விசுவாசம்'. இயக்குனர் சிவா இயக்கத்தில் டி இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் வேட்டிக்கட்டு, அட்சி தூக்கு போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெறும் 'தல்லே தில்லாலே' என்ற கிராமத்து குத்து பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான இரண்டு பாடல்களை விட இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இதன் பின்னர் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் இசையை படக்குழு வெளியிட உள்ளது.

Latest Post