ads

விசுவாசம்: டிஆர்பி ரேட்டிங் சாதனை படைத்த அஜித்தின் திரைபடம்

விசுவாசம்: டிஆர்பி ரேட்டிங் சாதனை

விசுவாசம்: டிஆர்பி ரேட்டிங் சாதனை

தற்போதைய மார்க்கெட் சூழ்நிலைகளில் செண்டிமெண்டை மையப்படுத்திய படங்களுக்கு கிராக்கி குறைவு என்றே சொல்ல வேண்டும். அப்படியே, செண்டிமெண்ட் படங்கள் வெளி வந்தாலும் வளர்ந்து வரும் நடிகர்கள் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவே அவ்வாறான படங்களைப் பயன்படுத்திக் கொள்வர். அஜித் போன்ற பெரிய மாஸ் ஹீரோக்கள் இது போன்ற சென்டிமென்டை கருவாகக் கொண்ட படங்களை விரும்பி நடிப்பது என்பது வியப்பான ஒன்று தான்.

அவ்வகையில், சமீபத்தில் பொங்கலுக்கு வெளிவந்து சக்கை போடு போட்ட படம் தான் விசுவாசம். வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித் சிவா கூட்டணியில் நான்காவதாக வெளிவந்த இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே விசுவாசம் அமைந்தது. அஜித் அவர்களின் கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு ஆடியன்ஸ் கண்களில்  கண்ணீரை வரவழைத்ததை எவரும் மறக்க இயலாது. தந்தை - மகள் இருக்குவருக்கும் இடையேயான பாசப் போராட்டமே கதை என்று கொண்டாலும் படத்தின் இறுதியில், "நம்மளோட ஆசைகளை நம்மளோட  குழந்தைகள் மேல திணிக்க வேண்டாமே !" என்று மெசேஜ் சொல்லி படத்தை முடித்திருப்பார்.

இதனையடுத்து, விசுவாசம் படம் 130 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் டி. ஜீ. தியாகராஜன் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார். ஆனால், 200 கோடியையும்  தாண்டி வசூல் நடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற காரணத்தினால் பல மொழிகளில் இந்த படம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விசுவாசம் படம் ஒளிபரப்பட்டது. தியேட்டரில் இமாலய வெற்றியை அடைந்து வசூல் சாதனை படைத்த விசுவாசம் படம் டிஆர்பி ரேட்டிங்கிலும் மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

பொதுவாக, டிவியில் ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளுக்கான TRP ரேட்டிங் ஒரு வாரம் கழித்து வெளியாகும். இதன் படி, 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் விசுவாசம் படத்தை டிவியில் பார்த்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. இதனால், தல அஜித்தின் விசுவாசம் படம் டிவியில் இதற்கு முன்பாக ஒளிபரப்பட்ட மற்ற படங்களின் TRP சாதனைகளையும் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் தல அஜித்தின் ரசிகர்கள் இந்த மகத்தான சாதனையை கொண்டாடி ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

விசுவாசம்: டிஆர்பி ரேட்டிங் சாதனை படைத்த அஜித்தின் திரைபடம்