ads

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் படக்குழுவினர் நிகழ்த்திய புதிய சாதனை

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா

பல தடைகளுக்கு பிறகு மீண்டும் உருவாகி வரும் திரைப்படம், நமது சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் முதல் முறை அறிமுகமாகும் ஆதித்ய வர்மா எனும் புதிய திரைப்படம். தெலுங்கில் சூப்பர் ஹிட் திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை வர்மா என்ற தலைப்புடன் தமிழில் ஆரம்பித்தனர். இந்த படத்தை முக்கால் வாசி முடித்த நிலையில் தயாரிப்பாளருடன் நடந்த கருத்து வேறுபாட்டினால் பாதியிலேயே விலகிக்கொண்டார் இயக்குனர் திரு.பாலா அவர்கள்.

நடிகர் சியான் விக்ரம் இயக்குனர் பாலா மூலமாக தனது மகன் ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதை நினைத்து பெருமைப்பட்டுவந்த நிலையில். இந்த சம்பவம் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. இருந்தாலும் படத்தில் பல மாற்றங்களை செய்து மீண்டும் உருவாக்கி வருகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் இந்த ஆதித்ய வர்மா படத்தில் பாலிவுட் நடிகை பணிதா சிந்து கதாநாயகியாக தற்பொழுது நடித்து வருகிறார். மேலும் தமிழ் நடிகை ப்ரியா ஆனந்த் மற்றும் கோலமாவு கோகிலா படத்தில் நடித்த இளம் காமெடி நடிகர் அன்பு தாசன் ஆகியோர் இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் இயக்குனர் திரு.கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி படத்தின் தயாரிப்பாளர் சார்பாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. தயாரிப்பாளர் முகேஷ் ஆர். மேத்தா அவர்களது E4 என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தை அதிவேகத்தில் படமாகி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே.சந்திரன் இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இயக்குனர்

கிரிசையா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

தற்பொழுது வெளியான செய்தி என்னவென்றால், ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே.சந்திரன் தனது டுவிட்டர் பதிவில் ஆதித்ய வர்மா படத்தின் 50 நாள் கொண்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என பதிவிட்டுள்ளார் இந்த படப்பிடிப்பு இடைவிடாமல் தொடர்ந்து 5௦ நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய சாதனையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தின் படக்குழுவினர் நிகழ்த்திய புதிய சாதனை