ads

ஜீவாவின் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்

ஜீவாவின்  அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்

ஜீவாவின் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்

கலகலப்பு 2 படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் கீ, ஜிப்ஸி, கொரில்லா போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் 'றெக்க' படத்தை இயக்கிய இயக்குனர் இரத்தின குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் நாயகி தேர்வு சமீபத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக தெலுங்கு நடிகை ரியா சுமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'பேப்பர் பாய்' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்க உள்ளார். இவருக்கு தமிழ் தெரியாது என்பதால் வசனங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்த்து நடித்து வருகிறார். இதற்கு ஜீவாவும் நல்ல உதவியாக இருப்பதாக ரியா சுமன் கூறியுள்ளார். இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்பவர் தயாரித்து வருகிறார்.

ஜீவாவின் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்