ads

சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன பிரபல நடிகை

சூப்பர் டீலக்ஸ்  சிஎஸ்கே

சூப்பர் டீலக்ஸ் சிஎஸ்கே

நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மிகவும் நூல் இலையில் கோப்பையை இழந்தது நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மற்றும் தமிழக முன்னணி பிரபலங்கள் பலர் மிகுந்த சோகத்திற்குள்ளாகினர். சமூக வலைத்தளங்களில் பலர் இந்த தோல்வி ஏற்றுகொள்ள முடியாதது என்றும் கூறி வருகின்றனர். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனான் தல தோனி அவுட்டானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை பற்றியும் சமூக வலைத்தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் ரசிகர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.  இந்த இறுதி போட்டியின் போது சி.எஸ்.கே அணியின் ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் 59

பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்களை குவித்தார். அவரை தவிர மற்ற ஆட்டக்காரர்கள் யாரும் அதிக ரன்களை குவிக்க தவறி சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தனர். ஆரம்பத்தில் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் கூறி வந்தாலும், தல டோனி அவருக்கு வாய்ப்பினை வழங்கி வந்தார். போட்டியின் பொழுது தவறி விழுந்த ஷேன் வாட்சனின் கால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. இதை யாரிடமும் சொல்லமால் தனது ஆட்டத்தை முழிமைப் படுத்தியுள்ளார் ஷேன் வாட்சன்.

போட்டி முடிந்ததும் அவருக்கு அடிபட்ட இடத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது. ஷேன் வாட்சனின் இந்த விடாமுயற்சியை பலரும் வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். சூப்பர் டீலக்ஸ் படத்தின் நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டரில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்தது மட்டும் அல்லாமல் அது வெறும் கப்பு தான சாமி என பதிவிட்டுள்ளார்.  சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கியமான காட்சியில் மஷ்கினுக்கு ஞானம் வழங்குவது போல், விஜய் சேதுபதியின் அது வெறும் கல்லு தான சாமி என்கிற டயலாக் அடிக்கடி ஒலிக்கும். சூப்பர் டீலக்ஸ் போஸ்டரை வடிவமைத்த கோபி பிரசன்னா தான் இந்த போஸ்டரையும் வடிவமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன பிரபல நடிகை