ads

அஜித்தின் தல 59ல் நாயகியாக நடிக்கவுள்ள கல்யாணி பிரியதர்ஷன்

அஜித்தின் தல 59ல் நாயகியாக நடிக்கவுள்ள கல்யாணி பிரியதர்ஷன்

அஜித்தின் தல 59ல் நாயகியாக நடிக்கவுள்ள கல்யாணி பிரியதர்ஷன்

சிறுத்தை சிவாவின் 'விசுவாசம்' படத்திற்கு பிறகு நடிகர் அஜித், 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் 'தல 59' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அமிதாப் பச்சனின் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தினை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். இதில் ஒரு நாயகியாக நடிக்க நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் படக்குழு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட உள்ளனர். பிரபல இயக்குனரான பிரியதர்ஷன் மகளான இவர் 'ஹலோ' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து 'வான்' என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். 

அஜித்தின் தல 59ல் நாயகியாக நடிக்கவுள்ள கல்யாணி பிரியதர்ஷன்