ads

அன்னையர் தினம் அன்று தான் அம்மாவை நினைக்கணுமா? விமர்சனத்திற்கு உள்ளான நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

தமிழ்த் திரையுலகின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர், காமெடி நடிகர் விவேக். திரைப் படங்களின் வரும் தனது காமெடிக் காட்சிகளில் எப்பொழுதும் சமூக நோக்கம் கொண்ட கருத்துக்களையே சொல்லி வருபவர். முக்கியமான சமூக மற்றும் பொது நலம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர். சின்னக் கலைவாணர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் மரங்களைப் பேணிக் காப்பதிலும் புது மரக் கன்றுகளை நடுவதற்கும் விழிப்புணர்வுப் பயணங்கள் மேற்கொண்டதோடு லட்சக்கணக்கில் நட்டும் உள்ளார். சமீபத்திய ட்விட்டர் பதிவில் கூட, பள்ளி விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், மரம் நட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோகிராப் போட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், உலக அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், நடிகர் விவேக். அவருடைய தாயாரின் புகைப்படத்தையும் தாயாருடன் சேர்ந்த செல்பீ படத்தையும் வாழ்த்துக்களுடன் இணைத்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்றே உலக அன்னையர் தினம் கொண்டாடப்படும். அவ்வகையில், இந்த வருடம் 12ம் தேதியே கொண்டாடப்படுகிறது. ஆனால், காமெடி நடிகர் விவேக், மே 9ம் தேதியே, அதாவது, 3 நாட்களுக்கு முன்னரே, தனது ட்விட்டரில் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஒரு புறம், விவேக்கின் இந்தப் பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் அன்னையர் தின வாழ்த்துக்கள் குவிந்தாலும், மறு புறம், விஜய் படத்தில் வரும் காமடியைப் போல, அன்னையர் தினம் அன்று தான் அன்னையை நினைக்க வேண்டுமா? என்று ரசிகர்கள் சிலர், அவருடைய தவறை சுட்டிக்காட்டி கலாய்த்தும் உள்ளனர். நடிகர் விவேக் அவர்கள், சமீபத்தில் வெளியான த்ரில்லர் படமான வெள்ளைப் பூக்கள் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ்த் திரையுலக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார், நடிகர் விவேக். முன்னணி ஹீரோக்கள் எவரும் இல்லாத நிலையில், இந்தப் படம் பேசப்பட்டதற்குக் காரணம், நடிகர் விவேக்கின் நடிப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னையர் தினம் அன்று தான் அம்மாவை நினைக்கணுமா? விமர்சனத்திற்கு உள்ளான நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு