ads

தளபதி 63 - விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ள இளம் நடிகர்கள்

தளபதி 63 - விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ள இளம் நடிகர்கள்

தளபதி 63 - விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ள இளம் நடிகர்கள்

'சர்கார்' படத்திற்கு பிறகு விஜய், அடுத்ததாக 'தளபதி 63' படத்திற்கு இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பினை வரும் ஜனவரி மாதத்தில் துவங்கவுள்ளனர். இந்த படத்தின் நாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இதன்படி இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். காமெடி நடிகர்களாக யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் தற்போது இரு இளம் நடிகர்களும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்தில் 'மதயானை கூட்டம்' படத்தின் மூலம் பிரபலமான கதிரும், 'மேயாத மான்' படத்தின் மூலம் பிரபலமான இந்துஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படம் விளையாட்டு துறை சார்ந்த படமாக உருவாகவுள்ளது. விளையாட்டு துறை என்றாலே போட்டி, பொறாமை, ஜாதி பாகுபாடு, அரசியல் போன்ற அனைத்தும் இடம்பெறும். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த படத்தினை அடுத்த ஆண்டு தீபாவளியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தளபதி 63 - விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ள இளம் நடிகர்கள்