ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் எழுதி இயக்குனராக உள்ள படம் என்.ஜி.கே. இப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பிரத்யேக நேர்காணலில், செல்வராகவன் என்.ஜி.கே பற்றி பேசினார். அவர் மிகவும் பெருமைப்படுவதாகவும், இந்த படத்தில் சிறந்த படக்குழுவுடன் பணிபுரிவது சந்தோசமாக கருதிகிறேன் என்றார். பின்னர் அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றியும், திரையரங்குகளில் வெளியிடப்பட்டபோது கிடைத்த வரவேற்பை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் செல்வராகவன் அந்நேரத்தில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் பயன் இல்லாதது வேதனைக்குரிய விஷயமாக இருந்ததாக கூறினார். ஆனால் ரசிகர்கள் நேசித்தார்கள் மற்றும் அதை மீண்டும் வெளியிட்டபோது படத்திற்கு வரவேற்ப்பை கொடுத்தனர. நான் மிகவும் குழம்பி விட்டேன். இது ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகும். மக்கள் தங்கள் அன்பை காண்பிப்கின்றனர். அதற்கு மாறாக நான் கண்டிப்பாக ஆயிரத்தில் ஒருவன் பகுதி 2 எடுக்க முயற்சி எடுப்பேன் மேலும் இது நடக்க வேண்டிய ஒன்று என்று கூறினார்.

ஆயிரத்தில் ஒருவன் பகுதி 2 ல் சூர்யா மற்றும் கார்த்தியை நடிப்பார்களா என்று கேட்டபோது, ​​"ஆயிரத்தில் ஒருவன் பகுதி 2 இல் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைத்து நடித்தால் மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும். ஆனால் அது நடக்குமா என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் இயக்குநர். அது ஒரு மிகப்பெரிய படமாக இருக்கும், மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்வது நிச்சயம் பெரிய ஏதிர்பார்ப்பை உண்டாக்கும் என்று பேட்டியில் கூறினார்"