ads
பிக் பாஸ் சர்ச்சையில் சிக்கிய ஆதிரை
அசோக் (Author) Published Date : Nov 03, 2025 11:53 ISTபொழுதுபோக்கு
நான்கு வாரங்களை நிறைவு செய்துள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூன்றாவது வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரை, வெளியேறிய பிறகு அளித்த பேட்டி ஒன்றால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பேச்சு, அவரை ஆதரித்து வந்த ரசிகர்களையே தற்போது வருத்தமடையச் செய்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஆதிரை இருந்தபோது, சக போட்டியாளர் வினோத்தின் முகத்திற்கு நேராகக் காலை தூக்கி வைத்த செயல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த வார இறுதியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, ஆதிரையின் அந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். இதுபோன்ற செயல்கள் அறையில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை சங்கடப்படுத்துவதுடன், நாகரிகமற்றது, என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், ஆதிரை ஒரு ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், விஜய் சேதுபதியால் கண்டிக்கப்பட்ட தனது செயல் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஆதிரை, நான் அன்று அப்படிச் செய்தது தவறு இல்லை, அது சரிதான் என்று எந்த விதமான வருத்தமும் இன்றித் தெரிவித்தார். மேலும், அந்தச் சூழ்நிலையில் நான் அப்படித்தான் நடந்திருப்பேன், என்றும் ஆதிரை கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதிரையின் இந்த பதில், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வீட்டிற்குள் ஆதிரை மீது தவறு இருந்தபோதும், சில சமயங்களில் நியாயமான விஷயங்களுக்காக அவரை ஆதரித்து வந்த ரசிகர்கள்கூட தற்போது பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். வெளியேறிய பின்னரும் இப்படிப் பேசுகிறார்களே, விஜய் சேதுபதி கண்டித்த பின்பும், தவறை உணராதது வருத்தம், என்று பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.