துப்பாக்கியை குறி வைக்கிறாரா நடிகர் சிவகார்த்திகேயன் ?
ராம் குமார் (Author) Published Date : Aug 25, 2025 15:15 ISTSports News
பொழுதுபோக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மதராஸி '. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் பல சுவாரஸ்யமான விவாதங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, இப்படத்தின் வில்லனாக நடித்துள்ள வித்யுத், "துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான்டா" என்று பேசும் வசனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது நடிகர் விஜயின் 'கோட்' படத்தில், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து "துப்பாக்கியை பிடிச்சுக்கோங்க சிவா" என்று விஜய் சொல்லும் காட்சியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த வசனம் 'கோட்' படத்துக்கான ஒரு மறைமுகமான குறிப்பாக இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி, 'மதராஸி ' படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்.