பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் 4, புதிய பரிணாமத்தில் கமல் ஹாசன், இன்னும் சில தினங்களில் ப்ரோமோ

பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. காரணம், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிந்தியில்...

By விக்னேஷ் · ·1 min read

பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. காரணம், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிந்தியில் சல்மான் கான் மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ விடியோவை ரிலீஸ் செய்து இணையத்தை அதிர வைத்துள்ளனர்.

இதன் காரணமாக தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள், தமிழில் யார் அடுத்த தொகுப்பாளர் மற்றும் எந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை இணையத்தில் தேட துவங்கியுள்ளனர்.

இவர்களுக்கான பதில், இந்த வருடமும் நடிகர் கமல் ஹாசன் தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். கலந்து கொள்ள இருக்கும் நடிகர்கள் மற்றும் பிரபலங்களை தேர்வு செய்யும் வேலைகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த முறை நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் கமல், முற்றிலும் புதிய பரிணாமத்தில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அரசியல் களம் இப்பொழுது முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யவுள்ளதால், கமலின் தோற்றம் - அனுபவம் வாய்ந்த சிறிய அளவு முதியவர் தோற்றமாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்றும் இவருக்கு இந்த முறை மக்களுடன் ஆலோசிக்க அரசியல் மட்டும் இல்லை, கூடவே உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா பற்றியும் அதிகம் பேசுவார்.


பிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்திBigg Boss Tamil Season 4 Latest News
View full article on தமிழ் செய்திகள்