Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் அம்சம்

வாட்சப்பில் புதியதாக பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான வாட்சப்பில் இறுதியாக ஸ்வைப் டு ரிப்லை மற்றும் டார்க் மோட் போன்ற அம்சங்களை வழங்கியது. இதனை தொடர்ந்து தற்போது பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் (Picture in Picture (PiP) mode) அம்சத்தை அனைத்து ஆண்டிராய்டு வாட்சப் பயனாளர்களுக்கும் வழங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனாளர்கள் தங்களது வாட்சப் செயலியில் பகிரப்படும் யூடியூப் விடியோக்கள், புகைப்படங்கள், பேஸ்புக் போன்றவற்றை வாட்சப்பை  உபயோகித்து கொண்டே சிறு திரை மூலம் காணலாம்.

இந்த திரை மூலம் விடியோக்கள் பிளே ஆகும் போது வாட்சப் செயலி பின்னணி திரையில் இயங்கும். இந்த அம்சத்திற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். தற்போது இந்த அம்சம் அனைத்து ஆண்டிராய்டு பயனாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாட்சப் செயலியை அப்டேட் செய்தவர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும்.

ஒரு வேளை வாட்சப் அப்டேட் செய்த பிறகு இந்த அம்சம் இயங்க வில்லை என்றால் உங்களது வாட்சப் செயலியை பேக்கப் செய்து கொண்டு மீண்டும் வாட்சப் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஆண்ட்ராயிடை தொடர்ந்து பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் அம்சத்தை iOS பயனாளர்களுக்கும் வழங்கவுள்ளார். iOS பயனாளர்களுக்கு இந்த அம்சம் வரும் ஜனவரியில் வழங்கப்படுவதாக வாட்சப் பீட்டா தெரிவித்துள்ளது.

வாட்சப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோட் அம்சம்