PhonePe நிறுவனம், உலகிலேயே முன்னணி AI நிறுவனங்களில் ஒன்றான ChatGPT உடன் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பார்ட்னர்ஷிப் மூலம், PhonePe செயலிக்குள் ChatGPT-ஐ கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அம்சங்கள் என்னென்ன இருக்கலாம்?

  • நீங்கள் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டால், எந்த இடத்துக்குச் சென்றால் சிறப்பாக இருக்கும், அதற்கு எவ்வளவு செலவாகும் (Budget) போன்றவற்றை இனி PhonePe செயலியே உங்களுக்குப் பரிந்துரைக்கும்.
  • எதிர்காலத்தில், நீங்கள் ஒரு கடைக்குச் சென்று தேநீர் குடித்துவிட்டு, அதற்கான தொகையைச் செலுத்த யுபிஐ பயன்படுத்தத் தேவையில்லை. நீங்கள் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு, உங்களுடைய UPI ID யை உங்கள் வாய்ஸ் மூலமாகச் சொன்னால் போதும், அதுவே தானாகப் பணப் பரிவர்த்தனையை செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்ப அப்டேட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், PhonePe மட்டும் அல்லாமல், ஏற்கெனவே Razorpay மற்றும் NPCI ஆகிய நிறுவனங்களும் AI மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.