Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

லேசர் தொழில்நுட்பத்தில் சாதனை நிகழ்த்திய மூன்று ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

லேசர் தொழில்நுட்பத்தில் சாதனை நிகழ்த்திய மூன்று ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

இயற்பியல் துறையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவத்தில் புற்று நோய் தடுப்பு பிரிவில் சாதனை படைத்த ஆய்வாளர்களான 'James P. Allison, Tasuku Honjo' ஆகியோருக்கு நோபல் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது இயற்பியல் சாதனை படைத்துள்ள அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்ட் மெளரு, கனடாவின் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகிய மூன்று ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு தொகை 6.5 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தை ஆர்தர் அஷ்கின் என்பவரும், மீதமுள்ள 50 சதவீதத்தை ஜெரார்ட் மெளரு மற்றும் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகியோர் பெறுகின்றனர். இவர்கள் இணைந்து லேசர் தொழில்நுட்பத்தில் நுண்ணிய பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ஆய்வாளர் அஷ்கின், நுண்ணிய பொருட்களை நிலைநிறுத்தி வைக்க 'optical tweezers'-ஐ உருவாக்கியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பானது வைரஸ் குறித்த உயிரியல் ஆராய்ச்சி மற்றும் இதர நுண்ணுயிரிகள் சார்ந்த ஆய்வுகளுக்கு மிகவும் உபயோகமானதாகும். மேலும்  ஜெரார்ட் மெளரு மற்றும் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகியோர் மிகவும் சக்தி வாய்ந்த லேசர் ஒளியை உண்டாக்குவதற்காக 'chirped pulse amplification'-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது கண் அறுவை சிகிச்சை மற்றும் உற்பத்தி துறைக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். இதனால் இத்தகைய அறிய கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு இயற்பியல் துறையில் மூன்று ஆய்வாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லேசர் தொழில்நுட்பத்தில் சாதனை நிகழ்த்திய மூன்று ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு