Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ரிவோல்ட் இன்டெலிகார்பின் புதிய வெளியீடு: இந்தியாவில் முன்பதிவுகள் விரைவில் துவக்கம்

ஆர்.வி 400

எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் ரிவோல்ட் இன்டெலிகார்ப் இன்று தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிள் ஆர்.வி 400 ஐ அடுத்த நான்கு மாதங்களில் ஏழு முக்கிய நகரங்களில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு இயங்கும் இந்த இருசக்கர வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்வதின் மூலம் 156 கிலோமீட்டர் பயணத்தூர வீதம் வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலையான, மலிவான வாகனங்களை வழங்குவதின் அடிப்படையில் ஆர்.வி 400 இருசக்கர வாகனம் வெளியிடவுள்ளதாக ரிவோல்ட்  இன்டெலிகார்ப் நிறுவனர் ராகுல் சர்மா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். 

நிறுவனம் தனது சொந்த வலைத்தளம் மற்றும் அமேசான் பயன்பாட்டின் மூலம் வரும் ஜூன் 25 முதல் வாகனத்திற்க்கான முன்பதிவுகளைத் திறக்கின்றது. பின்னர் டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அடுத்து வரும் நான்கு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார் .

சார்ஜிங் சிக்கல்களைத் தீர்வு தரும் விதமாக, நிறுவனம் வண்டியில் இணைக்கப்பட்ட மற்றும் போர்ட்டபிள் சார்ஜிங் அம்சங்களை வழங்கியுள்ளது. மேலும் எளிதில் எடுத்து செல்ல கூடிய பேட்டரி வழங்குவதோடு வீட்டிற்க்கே விநியோகம் செய்யும் வசதியையும் வழங்கியுள்ளது.

ஆர்.வி 400 இருசக்கர வாகனத்தின் பேட்டரி சார்ஜ் முழுமையாக நான்கு மணி நேரத்தில் நிரம்பிவிடுவதாக நிறுவனம் தெரிவித்தது.  ஹரியானாவில் உள்ள மானேசரில் உற்பத்தி செய்யும் ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ஆண்டுதோறும் 1.2 லட்சம் உற்பத்தி திறன் கொண்டதாக உள்ளது.

ரிவோல்ட் இன்டெலிகார்பின் புதிய வெளியீடு: இந்தியாவில் முன்பதிவுகள் விரைவில் துவக்கம்