Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஏலியனை தேடும் வேட்டையில் நாசா செயற்கைகோள் வெளியிட்ட முதல் புகைப்படம்

TESS செயற்கைகோளால் எடுக்கப்பட்ட முதல் விண்வெளி புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

ஏலியன் என்று கூறப்பட்டு வரும் வேற்றுகிரக வாசிகள் குறித்த தொடர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நீண்ட வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. ஏலியன் குறித்த வலைதள விடீயோக்களும், சினிமா படங்களும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எப்போது ஏலியன் பூமியில் நுழையும் என்ற கேள்வி மக்களிடையே ஒவ்வொரு நாளுமே இருந்து வருகிறது.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட கடந்த ஏப்ரல் மாதம் நாசா டெஸ் (Transiting Exoplanet Survey Satellite - TESS) என்ற செயற்கைக்கோளை வேற்றுகிரக வாசிகள் வசிக்கும் கிரகங்களை தேடும் வேட்டைக்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கை கோளை கொண்டு பூமியை போன்று வேறு ஏதேனும் மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்கள் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.

தற்போது TESS செயற்கைகோள் மூலமாக எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திர கூட்டத்திற்கு நடுவே TESS தனது கேமிரா மூலம் முதல் புகைப்படத்தை படம் பிடித்துள்ளது. இந்த TESS செயற்கைகோளின் ஏலியன் கிரகத்தை தேடும் பயணத்தில் புது புது கிரகங்களை காண ஆய்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த பயணத்தின் முடிவில் ஏலியன் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஏலியனை தேடும் வேட்டையில் நாசா செயற்கைகோள் வெளியிட்ட முதல் புகைப்படம்