Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பயனர் விவரங்களை விற்பதாக புகாரில் சிக்கிய ஐஒஸ் செயலிகள்

மேக் மற்றும் ஐஒஸ் தளங்களில் உள்ள செயலிகள் வாடிக்கையாளர்களின் லொகேஷன் குறித்த விவரங்களை வேறு நிறுவனங்களுக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து, நமது தனிநபர் தகவல்கள் அனைத்தையும் அதனுள் திணித்து விட்டு, அதனை கையில் எடுத்து சுற்றுகிறோம். இதனால் ஸ்மார்ட்போன்களுக்குள் செயல்பட்டு வரும் செயலிகள் மூலம் நமது தகவல்களை பெற்று கொள்கின்றனர். இதற்கான அனுமதிகளையும் நாமே தந்து விடுகிறோம். ஒரு செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது கேட்கப்படும் அனைத்திற்கும் 'Agree' பட்டனை க்ளிக் செய்து அதனை இன்ஸ்டால் செய்து விடுகிறோம்.

ஆனால் அந்த செயலியின் வரையறை என்ன வென்று அறியாமல் இன்ஸ்டால் செய்வதால் நம்முடைய அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் பெற்று கொள்கின்றன. இந்த தகவல்களை பணத்திற்காக ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து விற்று வருகின்றன. இந்த குற்ற சம்பவம் ஆண்டிராய்டு, ஐஒஸ் போன்ற அனைத்து தளங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது ஐஒஸ் தலத்தில் இயங்கும் செயலிகள் பயனாளர்களின் இருக்கும் இடம் குறித்த விவரங்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பதாக சூடோ செக்யுரிட்டி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ப்ளூடூத் எல்இ (Bluetooth LE), பீக்கன் டேட்டா (Beacon Data), ஜிபிஎஸ் (GPS) லாங்கிடியூட் (Longitude), லேட்டிடியூட் (Lattitude), எஸ்எஸ்ஐடி (SSID - Service Set Identifier) போன்ற விவரங்களை ஐஒஸ் தலத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான செயலிகள் விற்று வருகின்றன.

இது தவிர சில செயலிகள், GPS-ற்கு மட்டும் அனுமதி கேட்டு நம் ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரம், ஐபோன் நிலவரம் போன்ற பல தகவல்களை அனுமதியின்றி பெற்று கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட செயலிகள் சிக்கியுள்ளன. இதனால் பயனாளர்கள் தங்களது ஐபோனில் Settings --> Privacy --> Location Services --> System Services --> Location-Based iAds என்ற ஆப்ஷனை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் முடிந்தவரை செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது உங்களுக்கு தேவையான அனுமதியை மட்டும் வழங்க வேண்டும்.

பயனர் விவரங்களை விற்பதாக புகாரில் சிக்கிய ஐஒஸ் செயலிகள்