Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வாட்ஸ்சப் தளம் மூலம் உருவாகியுள்ள புதிய ஹேக்கிங் முறை

வாட்ஸ்சப் பயன்பாட்டில் ஹேக்கிங்

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்சப் பயன்பாட்டில் ஹேக்கர்கள், சாதனங்களில் ஸ்பைவேரை பயனாளர்களுக்கு தெரியாமலே நிறுவுகிறது. மேலும் வாட்ஸ்சப் ஸ்பைவேரை நிறுவ அனுமதித்து பெரிய பாதுகாப்பு மீறலை செய்துள்ளது. வாட்ஸ்சப்  பாதிப்பு சரி செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அறியமுடியவில்லை.

வாட்ஸ்சப் ஆடியோ அழைப்பு அம்சத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஹேக்கர்கள் சாதனத்தில் ஸ்பைவேரை நிறுவி பயன்பாட்டாளர்களின் அனுமதி இல்லாமல் செய்கின்றனர். வாட்சப் ஆடியோ அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் ஸ்பைவேர் நிறுவப்பட்டது என்று டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது. வாட்ஸ்சப் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை வெளியிடவில்லை, ஆனால் வரம்பு மிகவும் குறைவாக உள்ளது என்றனர். 

வாட்ஸ்சப் குழுமம் வாட்ஸ்சப் ஆடியோ அழைப்புகளுக்கு கூடுதலாக பாதுகாப்பை அளித்துள்ளது என்று வட்ட்ஸ்சப்பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அறியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வரும் பட்சத்தில் பயனாளர்களுக்கு குறியீடு ஒன்று அனுப்பப்படுகிறது என்றும் அறிவித்தார்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிப்பில் நிறுவனம் பாதிக்கப்பட்ட சாதனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்சப் முந்தைய அண்ட்ராய்டுகளும் v2.19.134 மற்றும் வணிக வாட்ஸ்சப் முந்தைய அண்ட்ராய்டுகளும் v2.19.44. ஐபோன் ஐஒஸ் முந்தைய வெளியீடுகளான v2.19.51,வணிக வாட்ஸ்சப் ஐஒஸ் முந்தய வெளியீடு v2.19.51 பாதிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் தொலைபேசியில் உள்ள முந்தைய வெளியீடு ஆனா  v2.18.348 டைசென் வாட்ஸ்சப் v2.18.15 வெளியீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாதனத்தில் உள்ள வாட்ஸ்சப் பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை. எனினும் வாட்ஸ்சப்  பயனர்கள் தங்கள் சாதனங்களில் பயன்பாட்டை சமீபத்திய மேம்படுத்தல் பதிவிறக்கம் செய்ய ஆலோசனை செய்கின்றனர். 

பைனான்சியல் டைம்ஸ் முதலில் இந்த குற்றத்தை வெளியிட்டது, இதற்கு பின்னணியில் இஸ்ரேலின் இணைய உளவுத்துறை என்எஸ்ஓ  குழு உள்ளது. வாட்ஸ்சப் நிறுவனம் இதுவரை இத்தகவலை மறுத்தோ அல்லது உறுதி செய்தும் எத்தகவலையும் வெளியிடவில்லை. இத்தகவல் உண்மையாக இருக்கும் பச்சத்தில், தற்காலிக ஹேக்கிங்  இன்னும் ஆபத்தான ஒன்றுக்கு வழிவகுக்கிறது. என்எஸ்ஓ குழு தங்கள் ஸ்பைவேர் மூலம் ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்வது மட்டுமில்லாது அவர்களது கேமராக்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளப்படுகிறது  என்றும் அறிவிக்கின்றனர். 

வாட்ஸ்சப் தளம் மூலம் உருவாகியுள்ள புதிய ஹேக்கிங் முறை