Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஹேக்கர்களிடமிருந்து தகவல்களை பாதுகாக்க கூகுள் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு சாதனம்

தனது வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்க கூகுள் நிறுவனம் புதிய பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் பொது மக்களின் தகவல்களை திருடி பணம் சம்பாதிப்பதற்காக எப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சத்தையும் ஹேக்கர்கள் உடைத்தெறிகின்றனர். ஹேக்கிங் என்பது அழிக்க முடியாத ஒன்றாக, தற்போது வரையிலும் தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்களுக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தற்போது ஹேக்கர்களிடம் இருந்து பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஜிமெயில் பாதுகாப்பு அம்சத்தை இரட்டிப்பாகியுள்ளது. தற்போது அதனை மேலும் கூடுதல் பாதுகாப்பு அம்சம் கொண்டதாக அமைக்க கூகுள் டைட்டன் செக்யூரிட்டி கீ என்ற பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளர்கள் தங்களது ஜிமெயில் மற்றும் இதர கணக்குகளை டைட்டன் செக்யுரிட்டியுடன் இணைத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு முறை லாகின் செய்யும் போதும் பாஸ்வோர்ட் கொடுக்கப்பட்ட பிறகு இரண்டாம் கட்ட பாதுகாப்பு அம்சமாக டைட்டன் செக்யுரிட்டி கீ சாதனத்தை உபயோகிக்க வேண்டும். இந்த இரண்டு பாதுகாப்பு சாதனங்களில் ஒன்று USB-மூலமாகவும் மற்றொன்று தங்களது மொபைல் மூலமாகவும் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அம்சம் கடந்த ஆண்டு வரை கூகுள் பணியாளர்களிடம் சோதனையில் இருந்தது.

கிட்டத்தட்ட 85,000 பணியாளர்களிடம் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை மூலம் ஹேக்கர்களிடம் இருந்து எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படாததால் தற்போது இந்த பாதுகாப்பு சாதனத்தை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த சாதனம் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. அமெரிக்க சந்தைகளில் இதன் மதிப்பு 50 டாலராகும். இந்திய மதிப்பில் 3590.75 ரூபாயாகும். வாடிக்கையாளர்களின் வரவேற்புகளை பொறுத்து இந்த சாதனத்தை விரைவில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளனர்.

ஹேக்கர்களிடமிருந்து தகவல்களை பாதுகாக்க கூகுள் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு சாதனம்