Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பயணத்தின் போது ஏற்படும் இன்னல்களை தவிர்க்க கூகுள் மேப்பின் புதிய அப்டேட்

கூகுள் மேப்பின் அடுத்த அப்டேட்டில் ஆண்ட்ராய்டு, iOS பயனாளருக்கு பல சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.

தற்போது கூகுள் மேப் செயலியானது தனது ஆண்டிராய்டு மற்றும் iOS பயனாளர்களுக்கு பயணங்களை எளிதாக்க புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. கூகுள் மேப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இந்த அப்டேட் அடுத்த வாரம் முதல் அனைத்து ஆண்டிராய்டு மற்றும் iOS பயனாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த அப்டேட் மூலம் கூகுள் மேப்பில் 'commute Tab' அம்சம் வழங்கவுள்ளனர். இந்த அம்சம் மூலம் பயனாளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சாலை வழியாக செல்லும் போது சிக்னல் அல்லது விபத்து மூலம் ஏற்படும் போக்குவரத்துக்கு இடைஞ்சலை தவிர்க்க உதவுகிறது.

கூடுதலாக இதற்கான மாற்று வழியையும் காண்பிக்கிறது. இந்த ஆண்டிராய்டு மற்றும் iOS தளங்களில் வழங்கப்பட்டாலும், ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு மட்டும் டிராபிக்கின் போது ஏற்படும் இடைஞ்சல்களுக்கான நோட்டிபிகேஷன் வரும். இதன் பிறகு வழங்கப்படும் இரண்டாவது அம்சம், தனியார் மற்றும் அரசு போக்குவரத்தில் பயணிக்கும்  அனைவருக்கும் அனைத்து தரப்பினருக்கும் உதவும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் அப்டேட் குறிப்பாக மக்கள் அடர்த்தி மிகுந்த மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் நகர் புற வாசிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

நீங்கள் வீட்டிற்கு அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் இந்த அம்சம் உங்களுக்கு பொருந்தும். உதாரணத்திற்கு அலுவலகத்தில் இருந்து வீட்டை அடைய முதலில் காரில் பயணித்து பின்பு ரயிலை குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய வேண்டும். ஆனால் வழியில் எதிர்பாராத விபத்து அல்லது டிராபிக்கால் ரயிலை குறிப்பிட்ட நேரத்தில் அடைய முடியாத நிலையில் உங்களுக்கு அடுத்த ரயில் வரும் நேரத்தையும், எவ்வளவு நேரத்திற்குள் நீங்கள் ரயில் நிலையத்தை அடைய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் கொடுக்கும்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக வழங்கப்படும் அம்சம், பேருந்து மற்றும் ரயில், எப்போது வரும் என்ற துல்லியமான நேரத்தை காண்பிக்கும். இந்த அம்சத்தை முதலில் 80 இடங்களில் மட்டும் வழங்கவுள்ளனர். பின்பு படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் வழங்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர கூகுள் மேப்பில் புதியதாக இசை செயலிகள் (Music Apps), Spotify, Apple Music, Google Play Music போன்ற செயலிகளையும் வழங்கவுள்ளனர். கூகுள் மேப் வழங்கவுள்ள இந்த அப்டேட்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெறும். இதன் மூலம் டிராபிக்கின் போது, ஏற்படும் இடைஞ்சல்களை தெரிந்து கொள்ளலாம், வீணாகும் அந்த நேரத்தில் கூகுள் மேப் மூலம் பாட்டையும் கேட்டு நேரத்தை கழிக்கலாம்.

பயணத்தின் போது ஏற்படும் இன்னல்களை தவிர்க்க கூகுள் மேப்பின் புதிய அப்டேட்