Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கூகுள் குரோமின் 10வது ஆண்டு விழாவையொட்டி புது அப்டேட்

குரோமின் 10 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புது புது அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் கூகுள் குரோமின் வடிவமைப்புகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வெப் புரவுஸர் செயலியான கூகுள் குரோம், தற்போது 10வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 2, 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் குரோம் 10 வருடங்களாக உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.ஒரு நாளைக்கு 1பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் கூகுள் குரோம் செயலியானது உலகம் முழுவதும் 47 மொழிகளில் கிடைக்கிறது.

தற்போது லேட்டஸ்ட் வர்சனான குரோம் 69.0.3497.100 ஆண்டிராய்டு, iOS மற்றும் விண்டோஸ் தளத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. குரோமின் 10 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புது புது அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் கூகுள் குரோமின் வடிவமைப்புகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. குரோமின் அட்ரெஸ் பாரில் (Address Bar) பயனாளர்கள் தேடும் வார்த்தைகளில் புதியதாக 'Switch to Tab' என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளர் ஏற்கனவே திறந்து வைத்திருக்கும் URL-ஐ தேடும் போது  'Switch to Tab' என்ற பட்டனை க்ளிக் செய்தால் உடனடியாக அந்த பக்கத்திற்கு சென்று விடும். மேலும் அட்ரெஸ் பாரில் (Address Bar) பயனாளர் தேடும் கேள்விகளுக்கு அங்கேயே பதில்கள் கொடுக்கப்படும். இதனால் தனியாக ஒரு பக்கத்தை திறக்க வேண்டியதில்லை. இது தவிர 'Password Generator' என்ற அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குரோமில் ஒவ்வொரு முறை பயனாளர் லாகின் செய்யும் போது சேமித்து வைத்துள்ள பாஸ்வோர்ட்களை ஆராய்ந்து அதுவாகவே பாஸ்வோர்ட் என்ன என்பதை காட்டும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள 'Password Generator' அம்சம் வலுவான பாஸ்வோர்ட் உருவாக்க உதவியாக இருக்கும். இது தவிர பாஸ்வோர்ட் பாக்சில் 'Manage Passwords' மற்றும் டெலிட் போன்ற பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஆண்டிராய்டு மற்றும் ஐஒஸ் தளங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் குரோமில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பயனாளரை கவரும் விதமாக புதிய வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது.

கூகுள் குரோமின் 10வது ஆண்டு விழாவையொட்டி புது அப்டேட்