Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஆண்ட்ராய்டு உபயோகர்களுக்கு இன்ஸ்டாகிராம் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் புதிய அம்சம்

இன்ஸ்டாகிராம் பயன்பாடு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள இடங்களிலும் எவ்வித தடையும் இல்லாமல் குறைந்த டேட்டா செலவில் இன்ஸ்டாக்ராமை பயன்படுத்தும் அம்சத்தை மேம்படுத்தி உள்ளது. இந்த அம்சத்தை தேர்வு செய்வதின் மூலம் உலகில் உள்ள பயனர்கள் பிடித்த உள்ளடக்கத்தை படங்களுடன் குறைத்த நேரத்தில் பார்க்க இயலும். இதன் மூலம் செல்போனில் உள்ள டேட்டா குறைவாக பயன்படுத்தப்படுகிறது. 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சந்தைக்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, மேலும் அதற்கேற்ப தரவு திட்டங்களும் இன்டர்நெட் வேகமும் வரையறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த அம்சம்  முன்கூட்டியே காணொளியை பதிவிறக்கம் செய்யாது, உயர் தர படங்களையும் பதிவிறக்கம் செய்யாது. இதனால் இன்ஸ்டாக்ராமின் டேட்டா உபயோகம் குறைந்தும், படங்கள் பதிவிறக்கம் செய்வதில் வேகமும் கூடும். 

இந்தியாவின் மொபைல் இணைய வேகம் ஏப்ரல் மாதத்தில் 108 வது இடத்தில் இருந்து121 வது இடத்திற்கு சரிந்துள்ளது என்று ஓக்லாவின் ஸ்பீடு டெஸ்ட் உலகளாவிய  குறியீட்டை மேற்கோள் காட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியா பேஸ்புக் கூட்டமைப்பு இயக்குனரும் தலைவருமான மனிஷ் சோப்ரா கூறுகையில், இன்ஸ்டாகிராம் மக்களுடன் நெருங்கி பழகவும், விரும்பியவற்றை பார்க்கவும் ஒரு மூலமாக இருக்கின்றது. காட்சி கதைகள் மட்டும் சமூக வீடியோக்கள் இந்த தளத்தில் பகிரப்படுகிறது. டேட்டா பாதுகாக்கும் அம்சம் மூலம் தடை இல்லாத பயன்பாட்டை பயன்படுத்தலாம். இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இந்த அம்சத்தின் மூலம் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் தொடர்பு கொள்ள இயலும். 

இப்புதிய அம்சத்தை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் உள்ள அமைப்புகளுக்கு (settings) செல்ல வேண்டும். அதில் கணக்கிற்கு (account) சென்று செலுலார் தரவு பயன்பாட்டை (cellular data use) செயல்படுத்த வேண்டும். இந்த அம்சத்தை செயல்படுத்துவதன் மூலம் முன்கூட்டிய பதிவிறக்கங்களை தடுக்க முடியும். அமைப்பை இயக்கியதும் ஒருபோதும் இல்லாத நிலை (never), வை-பை (wi-fi), செல்லுலார் + வை-பை (cellular+wi-fi) போன்ற பட்டியலில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த மூலம் இன்ஸ்டாகிராமில் உள்ள உள்ளடக்கத்தை உயர் தரத்தில் அனுபவிக்கலாம். 

இன்னும் ஒரு வார காலத்தில் உலகளாவிய ஆண்ட்ராய்டு உபயோகர்களுக்கு இந்த அம்சம் சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

ஆண்ட்ராய்டு உபயோகர்களுக்கு இன்ஸ்டாகிராம் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.