Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கெப்ளர் 1649 சி பூமியை போல் இருக்கும் புதிய பூமி கண்டுபிடிப்பு

கெப்ளர் 1649 சி பூமியை போல் இருக்கும் புதிய பூமி கண்டுபிடிப்பு

நாசா செய்தி வெளியீடு: கெப்ளர் -1649 சி என்பது மனிதர்கள் வாழக்கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எக்ஸோப்ளானட் ஆகும், இது பல வழிகளில் பூமிக்கு ஒத்ததாகும். கெப்ளர் தொலைநோக்கி மூலம், ட்ரான்ஸ் அட்லாண்டிக் விஞ்ஞானிகள் குழு இந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஏப்ரல் 15 அன்று வானியற்பியல் ஜர்னல் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, இந்த புதிய கிரகம் பிரபஞ்சத்தின் அளவு, ஆற்றல் மற்றும் அதன் அமைப்பின் முழுமையான புதிய தோற்றம் ஆகியவற்றின் சிறப்புகள்  அண்டை கிரகத்துடன் ஒப்பிடும் அளவிற்கு இருக்கிறது.

ட்ராப்பிஸ்ட் -11 மற்றும் டீகார்டன் சி போன்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும் ஒலியாண்டில் ஒரே அளவில் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவைகளை போல கண்டுபிடிக்க பட்ட கிரகங்கள் பூமியின் வெப்ப நிலைக்கு நிகராக இருந்தது.

ஆனால் இந்த புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எக்ஸோபிளானட் கெப்ளர் - 1649 சி மட்டுமே அமைப்பு மற்றும் மனிதர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வெப்பநிலை கொண்ட புதிய கிரகம்.

ஆண்ட்ரூ வாண்டர்பர்க் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின் முதல் எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் கூறுகையில், விஞ்ஞானிகள் ரோபோவெட்டரின் வழிமுறைகளை சரியாக பின்பற்ற தவறி இருந்தால், கண்டிப்பாக இந்த புதிய கெப்ளர் - 1649 சி பூமி போல் இருக்கும் கிரகத்தை கண்டுபிடிக்க தவறவிட்டிருப்பார்கள்.

கெப்ளரில் 1649 சி, 19.5 பூமி நாட்களுக்கு சமம். இது அதன் சிறிய சிவப்பு சூரியனை போல் இருக்கும் குள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது மற்றும் பூமியை விட 1.06 மடங்கு பெரியது. அது பெறும் நட்சத்திர ஒளியின் அளவு சூரியனிடமிருந்து பூமி பெறும் 75% க்கு சமம்.

பூமிக்கும் கெப்ளரில் 1649 சி கிரகத்திற்கும் வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் கெப்லரில் 1649 சி சுற்றிவரும் நட்சத்திர குடும்பத்தில் மனிதர்கள் வாழும் தகுதி மிகவும் சவாலானது.

கெப்ளர் 1649 சி பூமியை போல் இருக்கும் புதிய பூமி கண்டுபிடிப்பு