Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வாட்சப் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டேட்டஸின் சிறப்பம்சம்

வாட்சப் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டேட்டஸின் சிறப்பம்சம்

வாட்சப் ஸ்டேட்டஸ் புகைப்படம் மற்றும் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி

பிரபல சமூக வலைதள செயலியான வாட்சப் செயலியில் மெசேஜ் அனுப்புதல், குரூப் மெசேஜ், ஸ்டேட்டஸ், வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற அம்சங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஸ்டேட்டஸ் அம்சம் 24 மணிநேரம் மட்டுமே செயல்படும் ஒன்றாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளுமே மக்கள் தங்களுடைய தற்போதைய எண்ணங்களுக்கேற்ப வாட்சப் ஸ்டேட்டஸை புகைப்படமாகவோ அல்லது விடியோவாகவோ அப்டேட் செய்து வருகின்றனர்.

இந்த வாட்சப் ஸ்டேட்ஸில் அதிகபட்சமாக 16MB அளவு மட்டுமே புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை அப்டேட் செய்ய முடியும். இந்த 16Mb க்குள் நீங்கள் எத்தனை புகைப்படம் மற்றும் விடீயோக்களையும் அப்லோட் செய்து கொள்ளலாம். பிறகு 24 மணிநேரம் கழித்து தாமாகவே அழிந்து விடும். ஒருவர் பகிரும் விடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் பிடித்திருந்தால் அதனை பதிவு செய்து கொள்வது தற்போதைய மக்களின் வழக்கமாக உள்ளது. ஆனால் வாட்சப் ஸ்டேட்ஸில் உள்ள விடீயோக்களை பதிவு செய்யும் அம்சத்தை மட்டும் வாட்சப் நிறுவனம் காப்புரிமை பிரச்சனையை கொண்டு வழங்க மறுத்துவிட்டது.

ஆனாலும் வாட்சப் ஸ்டேட்டஸ் படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவு செய்ய பிளே ஸ்டோரில் 'ஸ்டோரி சேவர் (Story Saver For Whatsapp)' என்ற செயலி உள்ளது. ஆனால் இந்த செயலி வாட்சப் வழங்கப்பட்டது அல்ல. இந்த செயலியை இன்ஸ்டால் செய்யும் போது வாட்சப்புடன் இந்த செயலியும் இணைக்கப்பட்டு விடும். பின்பு இதனை கொண்டு எளிதாக ஸ்டேட்டஸ் புகைப்படம் மற்றும் விடீயோக்களை டவுன்லோட் செய்யலாம். மேலும் வாட்சப் ஸ்டேட்டஸ் விடீயோக்களை டவுன்லோட் செய்ய தனியாக ஒரு செயலி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

வேறு செயலி இல்லாமலே எளிதாக டவுன்லோட் செய்யும் வழியும் உண்டு. மற்றவர்களின் வாட்சப் ஸ்டேட்டஸை நீங்கள் காணும் போது அது தாமாகவே உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும். ஆனால் அது கேலரியில் காட்டாதே தவிர அது உங்கள் மொபைலில் தான் உள்ளது. இதற்கு Explorer-ஐ ஓபன் செய்து Settings-இல் Show Hidden files என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு Whatsapp-->Media-->Statuses க்கு சென்று ஸ்டேட்டஸ் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை காணலாம்.

வாட்சப் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டேட்டஸின் சிறப்பம்சம்