தொழில்நுட்பம்

ChatGPT யால் டெல்லி இளைஞருக்கு 50 லட்சம் சம்பளத்தில் வேலை

டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞர், ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி, யாரும் எதிர்பாராத வகையில் ₹50 லட்சம் ஆண்டு சம்பளத்துடன் ஒரு பெரிய...

By ராம் குமார் · ·1 min read

டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞர், ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி, யாரும் எதிர்பாராத வகையில் ₹50 லட்சம் ஆண்டு சம்பளத்துடன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பெற்றிருப்பது, தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கணினி மற்றும் அறிவியல் பட்டதாரியான அந்த இளைஞர், ஆரம்பத்தில் ஒரு சாதாரண BPO நிறுவனத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வந்தார். சில காலத்திற்குப் பிறகு, வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறு நல்ல வேலை தேடிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 9 மாதங்களாக அவருக்கு வேலை கிடைக்கவில்லை. பல நிறுவனங்களில் அவரது Resume ஷார்ட் லிஸ்ட் ஆகவில்லை, மேலும் பல நேரடி நேர்காணல்களில் கலந்துகொண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மன வருத்தத்தில் இருந்த அந்த இளைஞர், ChatGPT யை பயன்படுத்தத் தொடங்கினார். ஒவ்வொரு நிறுவனத்தின் வேலை விவரத்திற்கும் (Job Description) ஏற்றவாறு தனது Resume வை மாற்றியமைக்க ChatGPT அவருக்கு உதவியது. இந்த புதிய முறையில் ரெஸ்யூமைத் தயாரித்து வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக, ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.

கிடைத்துள்ள தகவலின்படி, அவரது ஆண்டுச் சம்பளம் ₹50 லட்சம் ஆகும். இதில், அடிப்படைச் சம்பளம் ₹35 லட்சம் மற்றும் போனஸ் தொகை ₹3.5 லட்சம் என்ற விவரங்களும் வெளியாகி உள்ளன. இந்த மகிழ்ச்சியான விஷயங்களை அந்த இளைஞர் ரெடிட் (Reddit) என்ற சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்டார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அந்த இளைஞரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த இளைஞரின் வெற்றியைப் பார்த்த பலரும், ChatGPT யை சரியாகப் பயன்படுத்தினால் எந்த அளவு வேண்டுமானாலும் முன்னேறலாம், அதற்கு இந்த இளைஞர் ஒரு சிறந்த உதாரணம். பலரும் இந்த AI கருவியை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர், என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

UPI மற்றும் AI செய்திகள்
View full article on தமிழ் செய்திகள்