Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கலிபோர்னியாவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கலிபோர்னியாவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவில் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் சேவை புரிந்து வரும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே தகவல் திருட்டு, பாதுகாப்பு குறைபாடு போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வரும் பேஸ்புக் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் நியூயார்க் போலீஸ் துறையினர் பேஸ்புக் அலுவலகம் நோக்கி விரைந்து வந்துள்ளனர். வெடிகுண்டு தேடும் நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய்களுடன் பல மணிநேரம் இந்த சோதனை நடந்துள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை வெளியேற்றி பேஸ்புக் அலுவலகத்தின் மூன்று மாடி கட்டிடம் முழுவதையும் அலசி ஆராய்ந்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் இது பொய்யான தகவல் என முடிவுக்கு வந்துள்ளனர். சுமார் பல மணிநேரம் நடைபெற்ற இந்த வெடிகுண்டு சோதனை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

கலிபோர்னியாவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்