Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

நடிகர் நகுலுக்கு 1.25 லட்சத்திற்கு போலி ஐபோனை டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்

நடிகர் நகுலுக்கு 1.25 லட்சத்திற்கு போலி ஐபோனை டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்

ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்னணி நிறுவனமான ப்ளிப்கார்ட், நடிகர் நகுலுக்கு போலி ஐபோனை டெலிவரி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளவர் நகுல். இவர் தன்னுடைய மூன்றாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு தனது மனைவிக்கு பரிசளிக்க ப்ளிப்கார்ட்டில் 'iPhone XS Max' என்ற 1.25 லட்சம் மதிப்புள்ள ஐபோன் மாடலை ஆர்டர் செய்துள்ளார்.

பின்பு இவருக்கு நவம்பர் 30ஆம் தேதி ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அவர் ஊரில் இல்லாததால் மறுநாள் வந்து  டெலிவரி பார்சலை பிரித்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். டெலிவரி பார்சலில் போலியான ஐபோன் மாடலை வைத்து ஏமாற்றியுள்ளனர். இவருக்காவது பரவாயில்லை, சில பேருக்கு சோப்பு கட்டிகள், செங்கல் கூட பார்சலில் வந்துள்ளது. தற்போது அனைவருமே உட்கார்ந்த இடத்திலிருந்து அனைத்து வேலைகளையும் முடிக்க நினைக்கிறோம்.

இதனால் ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் எதுவுமே நம்ம கூடியதாக இல்லை. 100பேரில் இரண்டு நபர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இதில் தற்போது நடிகர் நகுல் சிக்கியுள்ளார் . பார்சலை பிரித்த பிறகு அதிர்ச்சியான இவர், ப்ளிப்கார்ட்டின் வாடிக்கையாளரை தொடர்பு கொண்டுள்ளார். அதுவுமே அவருக்கு பலனில்லாமல் போய் விட்டது. இந்த போலி ஐபோன் குறித்த விவரங்கள் அனைத்தையும் பொது மக்கள் கவனத்திற்கு தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் நகுலுக்கு 1.25 லட்சத்திற்கு போலி ஐபோனை டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்