Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இனி விண்ணப்பித்த 4மணிநேரத்திலே பேன்கார்டு கிடைக்கும்

இனி விண்ணப்பித்த 4மணிநேரத்திலே பேன்கார்டு கிடைக்கும்

பொது மக்கள் விண்ணப்பிக்கும் 4 மணிநேரத்தில் பேன்கார்டு வந்தடையும் வகையில், நடைமுறைகள் முழுவதும் நவீனமயமாக்கப்பட்டு வருவதாக CBDT (Central Board of Direct Taxes) தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது "மக்களுக்கு வருமானவரித்துறை சார்ந்த நடைமுறைகள் எளிமையாக இருக்கும் விதமாக தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வருமான வரித்துறையில், வரிபணத்தை முன்கூட்டியே செலுத்துதல், வருமான வரி தாக்கல் செய்தல் போன்ற பல நடைமுறைகளை தானிய மையமாக்கல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வருமான வரித்துறையில், பொது மக்கள் விண்ணப்பிக்கும் பேன்கார்டு  நடைமுறைகளும் எளிமையாக்க பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு விண்ணப்பித்த பிறகு பேன்கார்டு வந்தடையும் கால தாமதம் குறையும். இதன் மூலம் பேன்கார்டு விண்ணப்பித்தாரர்களுக்கு 4 மணிநேரத்திற்குள் பேன்கார்டு வந்தடையும். மேலும் இந்த ஆண்டில் மட்டும் வருமான வரித்துறை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார். 

இனி விண்ணப்பித்த 4மணிநேரத்திலே பேன்கார்டு கிடைக்கும்