ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி

Sanju Samson and Ravindra Jadeja
Sanju Samson and Ravindra Jadeja

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை இறுதி செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரு மிகப்பெரிய வீரர் பரிமாற்றம் (Mega Trade) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் ரூ.18 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்

சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த நம்பிக்கை நட்சத்திரமான ரவீந்திர ஜடேஜா, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சள் ஜெர்சியில் ஆடிவந்தார். 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் அவர் அடித்த பவுண்டரி, சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த மறக்க முடியாத தருணம்.

மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான சஞ்சு சாம்சன், நீண்ட நாட்களாக சிஎஸ்கேவின் இலக்காக இருந்தார். தோனிக்குப் பிந்தைய காலத்தில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் நோக்கில், ரூ. 18 கோடிக்கு சாம்சனை சிஎஸ்கே வர்த்தகம் செய்துள்ளது. சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைவது ரசிகர்களுக்கு ஒருபுறம் ஆறுதல் அளித்தாலும், ஜடேஜாவின் விலகல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Post