Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சேலம்: ஒரு விரலில் மை தேசத்தின் பெருமை வீடியோ

Salem Lok Shaba Election 2019 சேலம்: ஒரு விரலில் மை தேசத்தின் பெருமை வீடியோ

தற்பொழுது நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் எடுத்து மக்களை ஓட்டு போடும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த வகையில், ஏப்ரல் மாதம் குழந்தைகளுக்கு  விடுமுறை காலம் என்பதால், பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு விடுமுறையை கழிக்க  செல்வது வழக்கம்.

இந்த முறை மக்களவை தேர்தல் கோடை விடுமுறை சமயத்தில் வந்துள்ளதால், விடுமுறைக்கு வரும் சுற்றுலா வாசிகளுக்கு நன்றாக தெரியும் இடங்களில் மற்றும் மக்கள் பெருமளவு கூடுகின்ற இடங்களில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் மற்றும் பலூன்கள் போன்றவற்றில் மக்களை ஓட்டுப்போட வலியுறுத்தியது.

அந்த வகையில், சேலத்தில் இருக்கும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காடு மலையில் உள்ள ஏரியில் "ஒரு விரலில் மை தேசத்தின் பெருமை" என்ற வாசகத்துடன் சிறிய அளவில் படகு ஒன்றை வடிவமைத்து, ஏரியில் உலவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும். நாம் ஓட்டு போடாமல் இருக்கும் நிலையில் நமது ஓட்டை மற்றவர்கள் போடும் வாய்ப்பும் உள்ளது மற்றும் நாட்டின் தலைவரை தேர்தெடுக்கும் உரிமையை  அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சேலம்: ஒரு விரலில் மை தேசத்தின் பெருமை வீடியோ